Ads (728x90)



செப்டம்பர் 22ம் தேதி வீட்டில் மயங்கிய நிலையில் இருந்து ஜெயலலிதா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவி மரணத்தை சுற்றியே தற்போது அரசியல் நகர்வுகள் உள்ளன.

அவரது சாவில் மர்மம் உள்ளதாக பல்வேறு தரப்பினர் சந்கேகத்தை கிளப்பி வருகின்றனர். மேலும் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பார்த்தோம், பார்க்கவில்லை என மாறுபட்ட கருத்துகளை கூறி வந்தனர்.



இந்த நிலையில், செப்டம்பர் 22ம் தேதி நடந்தது என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் அன்றைய தினம் இரவு ஜெயலலிதா படுக்கையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை எழுப்ப முயன்றபோது எதிர்வினை இல்லாமல் இருந்துள்ளது.

எனவே அப்பல்லோ மருத்துவமனைக்கு 10 மணிக்கு போன் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10வது நிமிடத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் 3 பேர் கொண்ட குழு வந்துள்ளது. அதில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு சர்க்கரை அளவு மிக அதிக அளவாக 508 ஆக இருந்தள்ளது.

சாதாரணமாக ஒருவருக்கு 120 அளவுதான் இருக்க வேண்டும். அதே போல 120 ஆக இருக்க வேண்டிய ரத்த அழுத்தம் 140 ஆகவும், 72 ஆக இருக்க வேண்டிய இதய துடிப்பு 88 ஆக இருந்துள்ளது. இது குறித்து அப்பல்லோ மருத்துவ மனையின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இறப்பு முழு விவரம்.


Post a Comment

Blogger