Ads (728x90)




ஏன் மோடி இந்தியாவின் மிகவும் வெறுக்கப்பட்ட பிரதமராக இருக்கிறார் ?


1)  1993 வழக்கு முடிக்கப்பட்டு,  அபு சலீம் சிறையில் இருக்கிறார்

2)  சசிகலா சிறையில் இருக்கிறார்

3)  ராம் ரஹீம் 2002 வழக்குக்காக சிறையில் இருக்கிறார்.

4)  நிதி அமைச்சகத்துக்கு,  மொத்த கருப்பு பணத்தின் அளவு தெரிந்துள்ளது.  இதை செய்பவர்கள் யார் என்கிற விபரங்களை தெரிந்து வைத்துள்ளது.  கண்கானிப்புகள் சிறப்பாக நடைப்பெற்று வருகின்றன‌

5) தில்லியின் தெற்கு பிளாக் மற்றும் வடக்கு பிளாக் பகுதிகளில் லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டது.

6) ஆதார் இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன்களையும் இனி வேவு  பார்க்கும். அவர்கள் எங்கிருந்தாலும் சரி

7) 11 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் அழிக்கப் பட்டுவிட்டன.

8) மொத்தம் ஒரு லட்சம் எரிவாயு அடுப்புகள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன‌

9) முத்தலாக் ஒழிக்கப்பட்டு விட்டது,  பலதார மணத்தை ஒழிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  கூடிய விரைவில் பொது சிவில் சட்டத்திற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

10 )  இந்திய அமெரிக்க நட்புறவு மிகச்சிறப்பாக உள்ளது.  பாகிஸ்தான் தீவிரவாத நாடாக அறிவிக்கப் பட்டுள்ளது.

11)   45 லட்சம் மக்கள் வரி விதிப்புக்குள் வந்துள்ளனர்.  இதில் பெரும்பாலோர் பல தலைமுறைகளுக்கு வரி செலுத்தாமல் இருந்தவர்கள்.

12)  'ஜி எஸ் டி' ஒற்றை வரி விதிப்பு முறையை அமல்படுத்தி உள்ளது.  விற்பனை வரி ஒழிக்கப்பட்டு,  சோதனை சாவடிகள் நீக்கப்பட்டு, சரக்கு வண்டிகள் பல நாட்கள் பிடித்து இலக்கை அடைவது ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி லிட்டர் டீசல் சேமிக்கப்பட்டுள்ளது.  முறைப்படுத்தப்படாத தொழில்கள் பலவும் வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு முறைப்படுத்தப் பட்டுள்ளன.

13)  காஷ்மீர் கொஞ்சம் கொஞ்சமாய் சரி செய்யப்பட்டு, தீவிரவாதிகளுக்கு அனுப்பப்படும் நிதிகள் ஒழிக்கப்பட்டு, பல முக்கிய தீவிரவாதிகள் அழிக்கப்பட்டு,  ராணுவமும்  பாரா மிலிட்டரியும் அதி நவீன யுக்திகளை கொண்டதாக மாறி வருகின்றது.

14)  மிஷநரிகள் மூலமாகவும்,  முல்லாக்கள் மூலமாகவும், மதமாற்றத்திற்காக அனுப்படும் ஹவாலா ப‌ண பரிவர்த்தனைகளின் குரல்வளை நசுக்கப்பட்டு வருகின்றது.  அவர்கள் செய்வத‌றியாமல் திகைத்து வருகிறார்கள்.

15)  இந்தியாவின் 70 சதவீதத்திற்கு அதிகமான மாநிலங்கள் 'என்.டி.ஏ. வின் ஆட்சியில் உள்ளது.  இதனால் வேகமான முடிவுகளை எடுக்க இயலும்,  சீரான கொள்கைகளை அமல் படுத்த‌ இயலும்.

16)  30 லட்சத்திற்கு மேலான "மணி லாண்டரிங்" எனப்படும் பண  மோசடியில் ஈடுபட்ட 'என் ஜி ஓ' க்கள் பிடி பட்டுள்ளனர்.

17)  வெளியுறவுத் துறை அமைச்சகம், வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பலரை, இஸ்லாமிய நாடுகளுடனான‌ பேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

18)  போர் வெறியில் இருந்த சீனா,  ஒடுக்கப்பட்டு,  ராஜதந்திரத்தால் 'செக் மேட்' செய்யப்பட்டு,  அடக்கப்பட்டுள்ளது.

19)  மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவும் இஸ்லாமிய அகதிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

20)  நீட் தேர்வு நேர்மையை கொண்டு வந்துள்ளது.  மருத்துவ சீட்டுக்காக பல கோடிகள் தரும் நிலை ஒழிக்கப்பட்டுள்ளது.  சமச்சீரான, தரமான முறையில் தேர்வு நடைபெறுகிறது.  இட ஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்துவது ஒழிக்கப்பட்டுள்ளது.  உண்மையான ஒடுக்கப்பட்ட,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மருத்துவ சீட்டுகள் கிடைக்கப்பெறும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

21)  கால்நடைகள் முறைகேடாக வெட்டப்படுவது ஒழிக்கப்பட்டு,  முறைப்படுத்தப்பட்டுள்ளது.

22)  2ஜி,  நேஷனல் ஹெரால்டு,  டி எல் எஃப்,  சுனந்தா புஷ்கர் வழக்குகளின் தீர்ப்புகள் வர உள்ளன.  எந்த கிரிமினல்களும் தப்பித்து விட இயலாது.

23) இந்தியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  ராணுவம் அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் அதி நவீன ஆயுதங்களோடும்,  உள்நாட்டு தயாரிப்பு ஊக்கப்படுத்தப்பட்டும், உலகின் தலைசிறந்த ராணுவத்தில் ஒன்றாக மாறி வருகின்றது.

இன்னும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.  மொத்தத்தில் தற்போது அனைத்து துறைகளிலும் உள்ள ஊழல்கள் சுத்தப்படுத்தப்பட்டு,   கண்கானிப்புகள் பலப்படுத்தப்பட்டு,  கட்டமைப்பு செம்மைப்படுத்தப் பட்டுள்ளது.  இனி எதிர்காலத்தில் திட்டப்படியான செயல்திறனும் விநியோகமும் நடைபெறத் தொடங்கும்.  .

ஆனால் நீங்கள் கருப்பு சந்தையில் செயல்புரிபவராகவோ,  ஹவாலா மோசடியில் இருப்பவராகவோ,  நக்ஸலோ,  பிரிவினைவாதியோ,  கம்யூனிஸ்டோ,  தேச துரோகியோ,  ராணுவத்திற்கு எதிரானவரோ,  சிறுபான்மையினர் என்கிற பெயரில் இந்துக்களை எதிர்ப்பவரோ,  மேலே உள்ளவற்றை புறந்தள்ளி விட்டு மோடியை எதிர்க்க புதிய காரணம் எதையேனும் கண்டு பிடியுங்கள்.  இல்லையென்றால் உங்களுக்கு தூக்கம் வருவதே கடிணம்தான்.    


(ஆங்கில கட்டுரை மொழிப்பெயர்க்கப்பட்டு,  செம்மைப் ப‌டுத்தப் பட்டுள்ளது)

அனைவருக்கும் வீடு 2022 ல்


Post a Comment

Blogger