Ads (728x90)



திருமணம் செய்த அன்றே தற்கொலை செய்த காதல் ஜோடி : இதுவா காரணம்?


ஆந்திர மாநிலத்தில் திருமணம் முடிந்த தினமே காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்தவர் பட்டுல்லா சந்தீப், இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகின்றார்.

மேலும் அதே கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் போகிரெட்டி மவுனிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, நேற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் இருவரது சடலங்களும் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டது. சடலங்களை கைப்பற்றிய பொலிசார் விசாரணை நடத்தியதில்,

இருவரும் விஜயவாடாவில் நேற்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

ஆனால் அன்றிரவே தாங்கள் தற்கொலை செய்யப் போவதாகவும் நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.

இதன்படி தற்கொலை செய்து கொண்டமை தெரியவந்துள்ளது. பெற்றோர்களுக்கு பயந்தே தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகின்றனர்.

Post a Comment

Blogger