Ads (728x90)




நேரம் வந்துவிட்டது  தினகரன் பேட்டி


துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடத்தும் இந்த ஆட்சியை கலைக்கும் நேரம் வந்துவிட்டது' என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில்தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,  பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலருக்கே உள்ளது, பொதுச் செயலர் இல்லை என்றால் துணைப் பொதுச் செயலரான நான் தான் கூட்ட வேண்டும். பழனிசாமியின் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்றும் அவர் கூறினார்.

இன்று இவர்களை ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் பதவியில் வைத்து எங்களால் பார்க்க முடியாது என்பதுதான் தமிழக மக்களின் எண்ணம் மட்டுமல்ல அதிமுகவின் 90 சதவீத தொண்டர்களின் நிலையும்.

துரோகமும் துரோகமும் இணைந்து நடத்தும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை தொடங்கிவிட்டேன். கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பதை நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்,



இதனை தொடர்ந்து, "தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி அல்ல. மீண்டும் தேர்தல் வந்தால் அவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள். தேர்தல் வந்தால் எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டியே"என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.



அதிமுகாவின் இந்த நிலை மற்ற எந்த கட்சிக்கும் வரவே கூடாது. அவர் அவர் இஷ்டத்திற்கும் கட்சியை பங்கு போட்டு கொண்டுள்ளனர்.

Post a Comment

Blogger