ஸ்டாலின் முதல்வர் கனவு இப்படி போயிடுச்சே!
திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து..! ஸ்டாலின் முதல்வர் கனவு இப்படி போயிடுச்சே!
திமுக சார்பில் இன்று மாலை நடைபெறவிருந்த எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
தினகரன் தரப்பை சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதனை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அதில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த எம்.எல்.ஏக்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதுடன்,
18 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், திமுக சார்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர்.
அதற்கு தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயம் வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
ஒரு வேளை நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பன பற்றி
ஆலோசிப்பதற்காக இந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியது.
நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை நீடிக்கும் என்று உத்தரவிட்டதால்,
இன்று மாலை நடைபெறவிருந்த எம்.எல்.ஏக்களின் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது திமுகவிற்கு மிகப்பெரிய இழப்பாக கருதுகிறது. ஒரு வேளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தால்.
அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் திமுக ஆட்சியை கைப்பற்ற முயன்றிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதினர்.
தற்போது அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. இதன் மூலம் மறைமுகமாக திமுக ஆட்சிக்கு வருவது கனவாக போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடியை மாமா வேலை பாக்குறியா என்று கேட்ட வெற்றிவேல்




Post a Comment
Blogger Facebook