Ads (728x90)




வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆந்திர எல்லை ஓரத்தில் அமைந்துள்ளது, நேற்று இரவு முழுவதும் ஆந்திர மாநில எல்லையில் வனப்பகுதியில் விடிய விடிய பெய்த கண மழையால் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்து  குடியாத்தம் அடுத்த கொல்லப்பள்ளி வழியாக கவுண்டன்ய மஹாநதியில் கலக்கின்றது.

இநிலையில் பொதுப்பணிதுறையினர் அலட்சியத்தால் அந்த காணாறு  தூர்வாரி கரைகளை பலப்படுத்தாததால் அதன் கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருவதும்,



தறை பாலத்தின் அடியில் செடிகள் வளர்திருப்பதால் அடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் தறை பாலத்திற்க்கு மேலே அதிக அளவிலும் அதிக வேகத்துடனும்  செல்லுவதால் இரவு நேரங்களில் ஆந்திரா, கர்நாடகா செல்லும் வாகணங்கள் பாதுகாப்பு வேண்டி நிருத்தப்படுவதாகவும்,

பகல் நேரங்களில் மிகுந்த பாதுகாப்பு கவணத்துடன் நிதானமாகவே வாகனங்கள் ஊர்ந்து செல்லுவதாகவும், இந்த நிலை நீடித்தால் விரைவில் தறைபாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லும் எனவும் விரைவாக சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாநில இணைப்பு நெடுஞ்சாலை பாதுகாக்கப்படும் எனவும்  வெள்ளப்பெருக்கு வேகம் அதிகரிக்கும் பொது மாநில போக்குவரத்து துண்டிக்கப்படும்  அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

செய்தி Gnanam Vel 
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Blogger