மனிதனின் அன்றாட தேவைகளாக இருந்தவை உணவு, உடை, இருப்பிடம்.
ஆனால் தற்போது உள்ள தலைமுறையினருக்கு உணவு இல்லை என்றாலும் பரவாயில்லை, செல்போன், டிவி, மின்சாரம் போன்றவை இல்லாமல் இருக்க முடியாது.
நவீன உலகத்தில் ஆடம்பரத்தையும், சொகுசு வாழ்க்கையையும் அனுபவிக்கும் நாம், வரும் காலங்களில் எதை எல்லாம் இழக்கப்போகிறோம் என்று தெரியுமா?
நல்ல உணவு, இயற்கையான காற்று, அமைதியான சுற்றுசுழல் இவைகளைத்தான் நாம் இழக்கப் போகிறோம்.
ஆனால் நமக்கு பின்னால் வரும் தலைமுறையினருக்கு இந்த வார்த்தைகளை தெரிந்திருக்கும் வாய்ப்புகள் கூட குறைவாகவே இருக்கும்.
மரங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி பூமியின் வெப்பநிலையை அதிகரித்தவர்களுக்கு வெயிலில் வேலை செய்பவர்கள் படும் கஷ்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு ஆய்வறிக்கையில் விவசாயம் அழிவதாலும், மரங்களை வெட்டுவதாலும் ஏற்படும் விளைவுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள்.
அதில் மரங்களை வெட்டுவதாலும், வாகனங்களில் இருந்து வரும் புகையினாலும் 2100 ஆண்டில் விவசாயிகள் மற்றும் திறந்தவெளில் வேலை செய்பவர்கள் சூரிய கதிர்வீச்சால் அதிக பாதிப்புக்குள்ளாவர்கள்.
அப்படியானால் இந்த நு}ற்றாண்டோடு விவசாயம் அழியக் கூட வாய்ப்புண்டு. அதன் பிறகு நம் தலைமுறையினர் எப்படி இந்த உலகத்தில் நிம்மதியாக வாழ முடியும்.
இந்த பாதிப்புகளை உணர்ந்த பல நாடுகள் பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களை 2040-க்குள் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது.
ஈராக்கின் முக்கிய தொழிலாக இருந்த விவசாயம், பல போர்களுக்கு பிறகும், குண்டு வீச்சுகளுக்கு பிறகும் ஒரு புல் கூட முளைக்காது என்ற நிலை இருந்த போதிலும் அவர்கள் விவசாயத்தை கைவிடவில்லை.
ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை மண்ணிலோ, விதை நேர்த்தியிலோ புகுத்தி விவசாயம் அழிந்து விடாமல் காப்பாற்றி வருகிறார்கள்.
ஆனால் நாம் அனைத்து வளங்களும் பொருந்திய நம் நிலத்தையும், இயற்கையான சூழலையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே அழிந்து வரும் விவசாயத்திற்கும், இயற்கைக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் போராட்டங்களோ, புரட்சியோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
உங்கள் வீட்டுப் பக்கத்தில் சிறியதாக ஒரு மரம் நடலாம். நீரை வீணாக்காமல் சேமிக்கலாம்.
இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும். இதை உங்கள் வீட்டில் இருந்து தொடங்குங்கள்.
இதுபோன்று நீங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவி செய்யலாம்.
மற்றவர்களுக்காக இல்லாமல் உங்களின் தலைமுறையை பாதுகாக்க மட்டுமாவது நீங்கள் இதை செய்ய வேண்டும்.
இந்த தகவலை படிப்பதோடு மட்டுமில்லாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்... !!
உதிரம் சிந்தி நிலத்தை உழும் உழவர் இங்கு இல்லையெனில்... உயிர் காக்கும் உணவும் இங்கில்லை.
லஞ்சம் வாங்கி மாட்டி கொண்ட தேவகோட்டை வி ஏ ஒ ,வீடியோ | live news tamil
Post a Comment
Blogger Facebook