Ads (728x90)



மதுரை அருகே 24 மாணவிகளை சீரழித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு 55 வருட சிறைத் தண்டனை

மதுரை அருகே அரசுப் பள்ளியில் படித்த 24 மாணவிகளை தலைமையாசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக நீதிமன்றம் 55 வருட சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மதுரை மாவட்டம் பொம்தும்பு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஆரோக்கியசாமி. இவர் பள்ளியில் படிக்கும் 90க்கும் மேற்பட்ட மாணவிகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.



எனினும், 24 மாணவிகளின் பெற்றோரும் மாதர் சங்கமும் 2011-ம் ஆண்டு காவல் நிலையத்தில் முறைப்படி புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் ஆரோக்கியசாமி மற்றும் அவருடன் 2 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மனித உரிமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் இன்று தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில்,

மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆரோக்கியசாமிக்கு 55 வருடம் சிறைத் தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.


மேலும், ரூ.3.40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 2 ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Post a Comment

Blogger