பெரியாரின் வாயில் இருந்து உதிர்ந்த வார்த்தைகள். சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை. திருக்குறள் ஒரு மலம்
சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை தேவடியாள் எப்படி வெளியே அழகாக உள்ளே வஞ்சகத்துடன் இருப்பாளோ அதுபோலவே சிலப்பதிகாரமும்"
வள்ளுவன் மூடநம்பிக்கையும் ஆரிய மத கருத்தையும் சொன்னான். திருக்குறள் ஒரு மலம். அதை வீசி எறி
தமிழனுக்கு இலக்கியம், வரலாறு, குடும்பம், பண்பாடே கிடையாது. இங்கு பிராமணன் வந்து எழுதியதும், பிராமண அடிமை எழுதியதும்தான் இலக்கியம்
தமிழில் இலக்கியம், வரலாறு என்ன இருக்கிறது? தமிழை விட்டால் என்ன கேடு? தமிழ்த்தாய் சத்தில்லாமல், அதன் பிள்ளைகள் நடைப்பிணமாகவே இருக்கிறார்கள்.
இந்தி எதிர்ப்பு அரங்குக்கு போனேன். இந்திக்கு பதில் இங்கிலீஷ் போதனாமொழி என ராஜகோபாலாச்சாரி சொன்னார். நான் இங்கிலிஷ் போதனாமொழி மட்டுமல்ல.
பேச்சுமொழியாகவும் இருக்க வேண்டும். #தமிழ் எழுத்துகளை நீக்கி, இங்கிலீஷ் எழுத்துகளை வைக்கவேண்டும் என்றேன்.
தமிழும் தமிழரும்” என்ற நூலிலே, ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.
தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு (தமிழருக்கு) நட்டம் என்ன? வேறுமொழியை ஏற்றுக் கொள்வதால் உனக்கு பாதகம் என்ன?”
புலவர்களுக்கு (தமிழ் படித்துத் தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கிற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆக வேண்டியிருக்கிறது?
”இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள்
1. தொல்காப்பியன், 2. திருவள்ளுவன், 3. கம்பன்.
இம்மூவரில்,
1. தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி.
2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான்.
3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான்.
முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான்.
இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.
- பெரியார்
1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத்தமிழ்மாநாடு நடத்தப்பட்டது. அப்போது #திருவள்ளுவர், #கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது.
அப்போது பெரியார் கூறியது
உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?(விடுதலை 15.12.1967)
என்று அறிக்கை விட்டார். தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காக பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர்
தமிழ்காட்டுமிராண்டிமொழி ஏன்? எப்படி?
(பிறகு அந்த நூலின் தலைப்பு "தமிழும் தமிழரும்" என்று மாற்றப்பட்டது. தற்போது வரை ஐந்து பதிப்புகள் #திராவிடர்கழகம் சார்பில் வெளி வந்துள்ளது.)
(ஆதாரங்கள்; திராவிட மாயை,ஈவெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ஆகிய நூல்கள்)



முற்றிலும் உண்மை ,அருமையான கட்டுரை
ReplyDelete