Ads (728x90)



புதிய ஆளுநருக்கு வேலை ஆரம்பம்.! நாளை மறுநாள் நடக்க இருப்பது…!!

தமிழகத்திற்கு புதிய ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பன்வாரிலால் புரோகித் . தற்போது தமிழகத்தோடு சேர்த்து புதிய ஆளுநராக தற்போது 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

தற்போதைய தமிழக அரசியல் சூழலில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்தால் பொறுப்பு ஆளுநரால் கவனிக்க முடியாது என்ற பட்சத்திலேயே முழு நேர ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஊழலுக்காகவே ஆட்சி கலைக்கப்பட்ட பூமி இது, இப்போது அதையும் விஞ்சிய செயற்பாடுகள் தமிழக அரசியலில் இடம்பெற்றுவருகின்றன.

நேற்று உதகையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவிலும்மேலும் அங்கு திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலை திறப்பு விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது அவர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

திமுக கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை. ஆனால், பாஜகவுக்கு அடிமையாக இருக்கும் ஆட்சியை தூக்கியெறிவதில் எந்தத் தயக்கமுமில்லை.

தமிழக சட்டப் பேரவையை கூட்டக் கோரியுள்ள வழக்கு இம்மாதம் 4-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

எனவே, இன்னும் 2 நாள் பொறுத்திருங்கள், தமிழக மக்கள் மகிழ்ச்சியடையும் தீர்ப்பு வரும்’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Blogger