நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளான இன்று அரசு சார்பில் அவருக்காக கட்டப்பட்ட மணிமண்டபம் திறக்கப்பட்டது.
அதில், சிவாஜி கணேசனின் குடும்பத்தினர், துணை முதல்வர், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினி, கமல், சத்தியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் கமலை பேச அழைத்த போது, ‘மேடையில் அமர்ந்திருக்கும் அமைச்சர்கள் பெருமக்களே’ என்று ஆரம்பித்தார்.
ஆனால், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை தனியாக குறிப்பிட்டு சொல்லாமல் மற்ற அமைச்சர்களுடன் இணைத்து பேச ஆரம்பித்தார்.
தான் நடிகனாக இல்லாமல் இருந்திருந்தாலும், இந்த விழாவில் ஒரு ஓரத்தில் இருந்தாவது கலந்துகொண்டிருப்பேன் என்று சிவாஜி ரசிகன் என்பதை வெளிப்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களே என்று பேச ஆரம்பித்தார்.
இதுகுறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் கூறுகையில், கமல் தமிழக அரசின் ஊழல்கள் குறித்து நேரடியாக குற்றஞ்சாட்டி வருவதால், துணை முதல்வர், அமைச்சர்களை தனித்தனியே குறிப்பிடாமல் பொதுவாக பேசினார்.
ஆனால், ரஜினியோ சிஸ்டம் சரியில்லை என்று கூறியதோடு சரி. அதன்பிறகு அமைதியாகவே இருந்து வருகிறார். ஏற்கனவே அவர் அனைத்து அரசியல்வாதிகளையும் அனுசரித்து போகிறவர் என்று கூறப்படுகிறது.
அதனை நிரூபிக்கும் வகையில், துணை முதல்வர், அமைச்சர்களை குறிப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளார். இதனால் தான் கமலை ரசிக்கிறோம் என்று கூறினர்.


Post a Comment
Blogger Facebook