Ads (728x90)



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 செப். 22ல் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

அங்கு, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ல் இறந்தார். அவரது மறைவு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

இது குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது.

அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 48 சதவீதம் மட்டுமே இருந்தது. அவர் முழு சுய நினைவுடன் இல்லை என கூறப்படுகிறது.

அவரது உடல்நிலை அதிகம் பாதிக்கும் வரை அவருக்கு ஏன் சிகிச்சை அளிக்கப் படவில்லை என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இவற்றுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.

எனவே விசாரணை கமிஷன் அவர்களிடமிருந்தே விசாரணையை துவக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதற்கிடையில் அமைச்சர்களின் முன்னுக்கு பின் முரணான பேச்சால் மருத்துவமனையில் ஜெ.,யை சந்திக்க சென்ற அரசியல் பிரமுகர்கள் கூறிய தகவல் அனைத்தும் பொய் என்பது உறுதியாகி உள்ளது.

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் என்ன நடந்தது என்பதே தெரியாத நிலையில் இருந்துள்ளார் என்பது, அனைத்து தரப்பினரிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., மறை வில் உள்ள மர்மங்கள் வெளிவர வேண்டும். அவரது மறைவுக்கு யார் காரணமாக இருந்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என, அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

ஜெயலலிதா இறப்பு முழு விவரம் அன்றிலிருந்து இன்று வரை | live news tamil


Post a Comment

Blogger