நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் மணி மண்டபத்தை திறந்து வைத்தார்.
ஆரம்பம் முதலே இந்த விழாவில் ஏன் எடப்பாடி கலந்து கொள்ளவில்லை? என்று அனைவரின் மத்தியிலும் கேள்வி எழுந்து வந்தது.
தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. நடிகர் சிவாஜி சிலையை, கருணாநிதி திறந்து வைத்தார்.
அதன் பிறகு ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, தினமும் கோட்டைக்கு செல்லும் வழியில் சிவாஜி சிலையை பார்த்து கொண்டு செல்வது வழக்கம்.
அந்த சிலை உங்களின் கண்ணில் படுவது, உங்களுக்கு ராசி இல்லை என்று ஜோதிடர் ஒருவர் கூறியிருக்கிறார்.
அதனால்தான், போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று கூறி சிலையை அகற்ற ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் நடந்த சட்ட போராட்டங்களுக்கு பிறகு அந்த சிலை அகற்றப்பட்டது.
இந்த நிலையில், சிவாஜி மணி மண்டபத்தை திறந்து வைப்பது உங்களுக்கும் ராசி இல்லை என்று எடப்பாடியை அந்த ஜோதிடர் தடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வித விதமாய் மோசடி துணிந்து கேட்கும் நபர் ஒத்துக் கொள்ளும் ஊழியர் | live news tamil

Post a Comment
Blogger Facebook