Ads (728x90)



நான் பேசினால் என் உயிர் போய்விடும்.. போயஸ்கார்டன் டிரைவர் அலறல்.!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்தாண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் 3 மாதங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி டிச.5ம் தேதி காலமானார்.

இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக தமிழக மக்கள் கூறிவருகின்றனர். இதனிடையே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா, சசிகலாவின் பற்றி அனைத்து ரகசியங்களையும் அறிந்து வைத்திருப்பவர் ஈஸ்வரன் இவர் டிரைவராக கார்டனில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தற்போது தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிகிறது. ஒரு வார இதழ் பத்திரிகைக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் பல உண்மைகளை தெரிவித்துள்ளார்.



மன்னார்குடியை சேர்ந்த லண்டன் செல்வம் என்பவரிடம் வேலை பார்த்து வருகிறேன். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது லண்டன் செல்வம் டிரைவரா வேலை பார்த்தவர்.

இவர் போயஸ்கார்டனுக்குள் எப்பொழுதும் எந்த நேரத்திலும் செல்லக்கூடியவர் ஆவார். அவருடன் நான் போகும்போது கார்டனில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் சொல்வார்.

ஒரு 6 மாதத்திற்கு முன்னாடி ஒரு வழக்குக்காக சசிகலாவும், ஜெயலலிதாவும் கட்டி புரண்டு சண்டையிட்டுள்ளனர். இதனை அங்கே இருந்த மூத்த அமைச்சர்தான் விலக்கி விட்டுள்ளார்.

ஜெயலலிதா வீட்டில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ் 12 பேர் இருப்பார்கள், அவர்கள் எந்த நேரமானாலும் தயார் நிலையில் இருப்பார்கள், அப்படி இருந்தும் ஜெயலலிதா உடல்நிலை எப்படி மோசமானது ஒன்றும் புரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Blogger