அடுத்த சில நாட்களில், சென்னையில் போட்டி பொதுக்குழுவை கூட்டுவதற்காக, புதிய பொதுக்குழு உறுப்பினர் பட்டியலை, தினகரனிடம், அவரது ஆதரவு மாவட்டச் செயலர்கள் வழங்கியுள்ளனர்.
இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி, முதல்வர் பழனிசாமி அணியும், சசிகலா அணியும், தேர்தல் கமிஷனில் மனு தாக்கல் செய்துள்ளன. அதற்கான பிரமாணப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை, முதல்வர் தரப்பு தாக்கல் செய்து உள்ளது.
அக்., 31க்குள், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என, தேர்தல் கமிஷனுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில், செப்., 29க்குள், இரு அணிகளும், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி அணி சார்பில், மேலும் சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன.
அதேநேரத்தில், 'மேலும், 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்' என, தினகரன் தரப்பில், தேர்தல் கமிஷனில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை, தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது.
தினகரனால், சமீபத்தில் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் அடிப்படையில், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் பட்டியலையும், அவர்களுக்கான பிரமாண பத்திரங்களையும் தயாரித்து வருகின்றனர்.
அந்த ஆவணங்களை, மாவட்டச் செயலர்கள், சென்னை, அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் ஒப்படைத்துள்ளனர்.
பிரமாண பத்திரங்களை, தேர்தல் கமிஷனிடம் வழங்கிய பின், அடுத்த சில நாட்களில், போட்டி பொதுக்குழுவைக் கூட்ட, தினகரன் திட்டமிட்டுள்ளார். அது குறித்து, வழக்கறிஞர்களுடன், அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிய வந்துள்ளது
வித விதமாய் மோசடி துணிந்து கேட்கும் நபர் ஒத்துக் கொள்ளும் ஊழியர் | live news tamil

Post a Comment
Blogger Facebook